திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:45 IST)

மீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..

குயின் இணையத்தள தொடருக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருவரால் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் உருவாகி வருகிறது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இரண்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். எனினும் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. மேலும் தலைவி திரைப்படத்தை கற்பனையானது என அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது குயின் இணையத்தள தொடரை தடை செய்ய வேண்டும் என மீண்டும் புதிய மனு தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் ”குயின்” இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். குயின் இணையத்தொடர் நாளை முதல் இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.