1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:41 IST)

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் வெளியீடு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் 13ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தேர்வை நடத்த வேண்டாம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீட் தேர்வு நடத்தியே தீருவது என்று தேசிய தேர்வு முகமை உறுதி செய்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருப்பதாகவும் இதில் சென்னை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒருபக்கம் நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமையும் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது