வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2016 (11:26 IST)

தேசிய மருத்துவர்கள் தினம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினம் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலைசிறந்த மருத்துவரும், முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான 'பாரத் ரத்னா' டாக்டர். பிதன் சந்திர ராய் அவர்களின் நினைவாக 'தேசிய மருத்துவர்கள் தினம்' நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
 
இந்த நன்நாளில், இந்த சமூகத்திற்காக அயராது சேவை செய்யும் மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவச் சேவைக்காக இரவுப் பகல் பாராமல் தங்களை அர்பணித்துக் கொண்ட மருத்துவர்களை நான் அறிவேன்.
 
மருத்துவத்துறையில் சேவைதான் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். நம்முடைய மக்களுக்கு தரமான மற்றும் எளிதில் கிடைக்க கூடிய மருத்துவச் சேவையை, மருத்துவர்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.