செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2018 (19:53 IST)

கே.பி.முனுசாமி இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம்: நாஞ்சில் சம்பத் பாய்ச்சல்!

அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கு சம்மந்தம் இல்லை, அவர் ஒரு அரசியல் குற்றவாளி என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறினர்.

 
இதற்கு பதிலடி கொடுத்து தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கே.பி.முனுசாமி கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டிய ஆள் என விமர்சித்துள்ளார்.
 
டிடிவி தினகரன் நித்தமும் மக்களை சந்திக்கிற தலைவர். மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பில்லாத இவர்கள், வெந்ததை தின்று வாயில் வந்ததை பேசுகிறார்கள். டிடிவி தினகரனுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று ஒரு அடி முட்டாள் கூட சொல்ல மாட்டான்.
 
கேபி முனுசாமி முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்க வேண்டியவர். ஜெயலலிதாவின் உதவியாளராக 3 வருடம், கழகத்தின் அமைப்புச் செயலாளராக, பேரவைச் செயலாளராக, பொருளாளராகவும் இருந்தவர் தினகரன். பெரியகுளம் மக்களவை தொகுதியில் 5 ஆண்டுகாலம் உறுப்பினராக, 6 ஆண்டு காலம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் தினகரன். அவருக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று முனுசாமி சொல்லுகிறார் என்றால், அவர் இருக்க வேண்டிய இடம் கீழ்ப்பாக்கம் என நாஞ்சில் சம்பத் பொரிந்து தள்ளிவிட்டார்.