பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தின் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமீபத்தில் திமுகவில் இணைந்தார் என்பதும் அவர் அதற்கு முன் அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உடல்நல குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நாஞ்சில் சம்பத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Edited by Siva