1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (00:43 IST)

இதுக்கு என்ன செருப்பை கழட்டி அடிச்சிடலாம்: நேர்காணலில் டென்ஷன் ஆன நாஞ்சில் சம்பத்

பிரபல ஊடகம் ஒன்று சமீபத்தில் தினகரன் அணி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தை பேட்டி எடுத்தது. அப்போது பேட்டி எடுத்தவர் நாஞ்சில் மனோகரனிடம், 'தினகரனை ஆதரிக்க நீங்கள் பெருமளவு பணம் வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.



 
 
இந்த கேள்வியால் டென்ஷன் ஆன நாஞ்சில் சம்பத், பேட்டி எடுத்தவரை பிடிபிடி என பிடித்தார். இதுக்கு என்ன செருப்பை கழட்டி அடிச்சிடலாம். என்னை பார்த்து நீ எப்படி அந்த கேள்வியை கேட்பாய். நானே காருக்கு டீசல் போட கூட காசு இல்லாமல் இருக்கேன், என்னை பார்த்து நீ எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்' என்று ஆத்திரம் அடைந்தார்
 
தினகரனை ஆதரிக்கும் ஒரே நபர் இவர்தான். இவரது பெயரை டேமேஜ் பண்ண வேண்டும் என்றுதிட்டமிட்டு என்னிடம் நீ பேட்டி எடுக்கின்றாய், நான் மக்கள் பிரதிநிதி அல்ல, கொள்கைக்காகவே கடைசி வரை வாழ்ந்து வருபவன்' என்று கூறினார்.