ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (15:00 IST)

அது போங்கல் இல்லம்மா.. பொங்கல்..!- கலாய் வாங்கும் நமீதா பேச்சு

சென்னையில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நமீதா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தப்பும் தவறுமாய் தெரிந்த தமிழை பேசினாலும் குறிப்பிடத்தகுந்த ரசிகர்களை பெற்றவர் நமீதா. ‘மானாட மயிலாட’ காலத்திலிருந்தே இவரது மச்சான்ஸ் டயலாக் மிகவும் பிரபலம். சில நாட்களாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தவர் பிக்பாஸ் மூலம் மீண்டும் பேசப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் தேர்தல் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பொங்கல் நெருங்கி வரும் நிலையில் பாஜக சார்பில் தமிழக மாவட்டங்களில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நமீதா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் “எல்லாருக்கும் போங்கல் நல்வாழ்த்த்துக்கள் போங்கலோ போங்கல்” என கூறியுள்ளார். பொங்கல் என்பதை தவறுதலாக போங்கல் என அவர் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.