தலைவனை தரையில தேடனும்; திரையில் தேடக்கூடாது: ரஜினியை விடாத சீமான்!
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டுள்ளார் சீமான்.
இந்நிலையில், எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமே தமிழகர்கள், நான் சொல்லும் திட்டத்தை எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் செயல்படுத்தி வருகிறார் என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவர், இதனோடு சேர்த்து நடிகர் ரஜினிகாந்தையும் சீண்டியுள்ளார்.
ஆம், மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என கூறிய சீமான், நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன், சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர் என ரஜினியை டார்க்கெட்டாகியுள்ளார்.
இதற்கு முன்னர், ஒருவேளை ஐயா ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வந்தால், அரசியல் ஆட்டம் சூடு பிடிக்கும். சரி ரஜினி வரட்டும் மோதலாம்! ரஜினி அரசியலில் களமிறங்குவதற்கு ஐ அம் வெய்டிங். களத்துக்கு வா.. மானத்தமிழனா, மராட்டியனா என்பதை அப்போ பாக்கலாம் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.