வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (09:16 IST)

தெரியாம வீடியோ செஞ்சிட்டேன்.. இனிமே பண்ண மாட்டேன்! – மன்னிப்பு கேட்ட துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வீடியோ எடுத்து டிக்டாக் செய்தது சர்ச்சைக்குள்ளான நிலையில் தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் டிக்டாக் வீடியோ செய்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. துரைமுருகனின் இந்த செயலுக்கு காங்கிரஸார் கண்டனம் தெரிவித்ததுடன், துரைமுருகனை கைது செய்ய கோரி போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள துரைமுருகன் அந்த டிக்டாக் வீடியோ இவ்வளவு சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை தான் ஏற்கனவே நீக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.