திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:56 IST)

’ஜெய்பீம்’ படம் பார்த்த நல்லக்கண்ணு: படக்குழுவினர்களுக்கு வாழ்த்து!

’ஜெய்பீம்’ படம் பார்த்த நல்லக்கண்ணு: படக்குழுவினர்களுக்கு வாழ்த்து!
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் பாட்டாளி மக்கள் கட்சி உள்பட ஒரு சில அமைப்புகள் மட்டும் இந்த படத்திற்கு மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படத்தை தமிழக அரசியல்வாதிகள் பலர் பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் இன்று ’ஜெய்பீம்’ படம் பார்த்தபின் அவர் சிவகுமார், சூர்யா மற்றும் படக்குழுவினர் அனைவரையும் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.