தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாகலாந்து முதல்வர்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நாகலாந்து முதல்வர் நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் நாகலாந்து மாநில நோயாளிகள் நோயாளிகள் தங்குவதற்கு இல்லம் அமைக்க தமிழக அரசு இலவசமாக நிலம் வழங்கியுள்ளது.
சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலம் நாகலாந்துக்கு இலவசமாக வழங்கியதை அடுத்து அதற்கு த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நாகலாந்து முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்
நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கு வரும் போது இந்த இல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.