திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (10:00 IST)

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது.. என்ன காரணம்?

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை சற்றுமுன் கைது செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்ததாகவும் இதனை அடுத்து தமிழக அரசையும் தரக்குறைவாக அவர் விமர்சனம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் மற்றும் யூடியூப் பிரபலம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கட்டணம் தெரிவித்து வருகின்றன.
 
Edited by Siva