ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:39 IST)

பள்ளியில் பூட்டு மேல் பூட்டு போட்ட மர்மநபர்.. வெளியே காத்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு நிர்வாகம் சார்பில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் அதன் அருகே மற்றொரு பூட்டை மர்ம நபர் ஒருவர் பூட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தினமும் பள்ளி நேரம் முடிந்ததும், மாலை நேரத்தில் பள்ளிக்கு நிர்வாகம் பூட்டு போட்ட நிலையில், நேற்று திடீரென அந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டு மர்ம நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது.

மறுநாள் காலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் வந்த போது இரண்டு பூட்டுகள் போட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்களும் பள்ளி முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் பள்ளி ஆசிரியர்கள் பூட்டை உடைத்து மாணவ மாணவிகள் உள்ளே சென்றனர். இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர்தான் பூட்டு மேல் பூட்டு போட்டார் என்பது விசாரணைக்கு தெரிய வந்தது. சுமார் ஒரு மணி நேரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பள்ளி முன் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva