நகராட்சித் தேர்தல்: விஜயகாந்த் பிரசாரம் செய்கிறாரா..? பிரேமலதா தகவல்
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை புழலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக உண்மை, லட்சியத்தை வைத்து போட்டியிடுகிறது. நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவிற்கு வெற்றி கிடைக்கும், விஜயகாந்த் பிரசாரம் செய்வது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.