ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (20:46 IST)

கள்ள உறவால் மகளைக் கொன்ற ’தாய்’

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கோடப்மந்து அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெகநாதன்.  இவரது மனைவி ராஜலட்சுமி (33). இவர்களுக்கு உஷாராணி என்ற மகள் உள்ளார்.இவர் அருகே உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ராஜலட்சுமிக்கு அதே பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்தது.இதை பலமுறை கணவர் கண்டித்தும் விடாமல் தொடந்துள்ளார் ராஜலட்சுமி. 
 
இதனால் விரக்தி அடைந்த ஜெகநாதன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ராஜலட்சுமி தன் தாயின் வீட்டில் குழந்தையுடன்  வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று உஷாராணி காலையில் வெகுநேரம் தூங்கிக் கொண்டிருந்தார்.
 
இதனால் அனைவரும் சந்தேகம் அடைந்தனர். பின்னர் சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து உதகை காவல் உதவி ஆய்வாளர் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதன் கலக்கம் அடைந்த உஷாராணி தான் கொலை செய்ததை  ஒப்புக்கொண்டார்.
 
அதன் பின்னார் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்த  போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.