வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:33 IST)

பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்! – குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாக்குமரியில் பெற்ற பிள்ளைகளை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் லதா. இவருக்கு கல்லூரி படிக்கும் ஒரு பெண்ணும், பள்ளிக்கூடத்தில் 10 மற்றும் 12வது படிக்கும் இரண்டு பெண்களுமாக மொத்தம் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி தக்கலையில் லதா வசித்து வந்த வீட்டிற்கு அடிக்கடி பல ஆண்கள் போவதும், வருவதுமாக இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை கண்காணித்து வந்த நிலையில் வீட்டிற்குள் திடீரென புகுந்து சோதனை செய்துள்ளனர். அப்போது இரு தனி அறைகளில் சிறுமிகளோடு உல்லாசமாக இருந்த இருவர் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் ஒருவர் பெண் காவல் ஆய்வாளரின் கணவர் என்றும், மற்றொருவர் கூலி வேலை பார்க்கும் ஆசாமி என்றும் தெரிய வந்துள்ளது.

லதா தனது மூன்று பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன் மகள்கள் மட்டுமல்லாமல் கடைசி மகளின் சிநேகிதியான சிறுமி ஒருவரையும் ஆசைக்காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிய வந்துள்ளது. இதயடுத்து அந்த பெண்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார், லதா மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.