சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா உறுதி!
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
ஏற்கனவே சீனாவிலிருந்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கும் பெங்களூரை சேர்ந்த சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவில் இருந்து நேற்று மதுரை வந்த தாய் மகள் ஆகிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து இந்தியா வரும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva