செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (14:18 IST)

வீட்டியிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு

தஞ்சாவூரில் வீட்டியிலேயே பிரசவம் பார்த்த தாய், சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் வசந்தி. இவர்,  6வது முறையாக பிரசவித்த ஆண் குழந்தை இறந்துள்ளது.

பிரசவித்தபோது அதிக ரத்தப் போக்கு போகவே, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி வசந்தி உயிரிழந்தார்.

இந்த நிலையில்வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தான் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் வாளியில் கிடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு சிசுவின் சடலம் இருந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளார்.