திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (20:41 IST)

தமிழக முதல்வருக்கு கிடைத்த பத்து லட்சம்: தொண்டர்கள் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதை அடுத்து தொண்டர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர் 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வரான பின்னர் தான் டுவிட்டரில் இணைந்தார். அதுமுதல் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்
 
பொதுமக்களுக்கு கோரிக்கை விடுப்பது, அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க மேற்கொள்வது ஆகியவையும் அவரது டுவிட்டர் பக்கம் மூலம் நடந்து வந்தது. மேலும் பலர் தங்களுடைய கஷ்டங்களை முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகள் ஆகியவைகளும் முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகி வந்தது. இதனால் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது
 
இந்த நிலையில் தற்போது அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது என்பதும் இதனால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது