துரைமுருகனை அடுத்து 10 பேர் கொண்ட லிஸ்ட்: ஐடி அதிகாரிகளிடம் மாட்டப்போவது யார்?
மக்களவை தேர்தலின் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் திடீரென களத்தில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சோதனையில் பலகோடிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளை தொடர்ந்து, மேலும் பல தி.மு.க. புள்ளிகளின் வீடுகளில் ரெய்டு நடத்த ஐடி அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக 10 பேர் கொண்ட ஹிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் பரபரப்பான பிரேக்கிங் செய்திகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை பயத்தால் திமுகவினர் ஒருவித பயத்தால் மட்டுமே பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.