1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (19:02 IST)

மகாராஷ்டிராவில் குரங்கு காய்ச்சல்: 2 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் குரங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமகா எடுக்கப்பட்டு வருகிறது.


 

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் குரங்கும் காய்ச்சல் எனப்படும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சிந்து துர்க் என்னும் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் வசிப்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். 
 
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 842 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நோய் குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுயதாவது:- 
 
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலியுடன் கூடிய அதிக காய்ச்சல் இருக்கும். இது டெங்கு காய்ச்சல் போன்றது. இறுதியில் மூளையில் ரத்தக்கசிவை ஏற்படுத்தி இறப்புக்கு காரணமாக்கும், என்றார்.
 
தற்போது நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த வைரசை கட்டுப்படுத்த மலாத்தியான் என்ற மருந்து பொடி தூவப்பட்டு வருகிறது.