செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2024 (07:27 IST)

கைது செய்வதற்கு உரிய காரணங்கள் முறையாக இல்லை: மோகன் ஜிக்கு ஜாமீன்..!

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, கைது செய்வதற்கான உரிய காரணங்கள் இல்லாததால், சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலப்பதாக சொல்லப்படுகிறது" என்று கூறியிருந்தார். இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று மோகன் ஜி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை செய்ய காவல்துறையினர் சென்றதாகவும், விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அதன்பின் அவர் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், மோகன் ஜி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, கைது செய்வதற்கான உரிய காரணங்கள் இல்லாததால், இயக்குநர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததாக திருச்சி நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். இதனை அடுத்து, மோகன் ஜி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva