திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:51 IST)

நவீனமயமாகும் சென்னை வள்ளுவர் கோட்டம்.. லேசர் ஷோ காட்சிகளுக்கு திட்டம்..!

சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன மயமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் 1976 ஆம் ஆண்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால், தற்போது ரூ. 80 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இங்கு உள்ள கலையரங்கம், குரல் மணி மாட கூரை, தரைகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, ஓவியம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த பின், வரும் டிசம்பர் மாதம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதுப் பொலிவுடன் திறக்கப்பட உள்ளது. கூடுதலாக, பார்வையாளர்களுக்காக பார்க்கிங்வசதிகள் செய்யப்பட்டு, தேநீர் கடை, ஹோட்டல் போன்றவை திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், பொழுதுபோக்கு அம்சமாக லேசர் ஷோ நடத்தப்பட இருப்பதோடு, திருவள்ளுவருக்கான ஆய்வு மையம் அமைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கல்தேர்  புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னர், டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva