திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (13:11 IST)

தேர்ச்சி பெறாதவர்கள் நான் சொல்வதை செய்யுங்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாயுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது!” என்று வாழ்த்தியுள்ளார்.