திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (12:12 IST)

எனது இந்த திராவிட ஆட்சி பெரியாருக்கே காணிக்கை! – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

MK Stalin
இன்று பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்



திராவிட கட்சிகளின் தோற்றத்திற்கு காரணமாக திராவிட இயக்கத்தை தொடங்கி கடவுள் மறுப்பி பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டவர் பெரியார் என அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி. இன்று அவரது 144வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல திராவிட கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெரியார் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K