புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (10:15 IST)

5 புதிய திட்டங்களை துவங்கி வைக்கும் ஸ்டாலின்: என்னென்ன தெரியுமா?

மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஐந்து புதிய திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார். 

 
இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஐந்து புதிய திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார். அவை பின்வருமாறு... 
 
1. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று தொடக்கம். 
2. ரூ.4,000-த்துடன் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது. 
3. ரேஷனில் கொரோனா நிவாரணத்தின் 2-வது தகணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். 
4. தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். 
5. கொரோனா நோய் தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்குகிறார்.