புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:26 IST)

மத்திய அரசுக்கு கண்டனம்; ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 

 
நீட் தேர்வு விவகாரத்தில் அனிதா மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணம் தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய, மாநில அரசுகளை குற்றம்சாட்டியுள்ளனர்.
 
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது அனைத்து கட்சி கூட்டம்  நடைபெற்றது. இதில், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அதில், பொது பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே மாற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்மானத்தில் அனிதா மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  
 
இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்டுப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.