1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:35 IST)

இந்த வாரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000.. இன்று இறுதிக்கட்ட ஆலோசனை..!

MK Stalin
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டத்தை வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 
 
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் தொடங்க இருக்கும் இந்த திட்டத்திற்கு இறுதி கட்ட ஆலோசனை இன்று நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்  பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.  
 
செப்டம்பர் 15 முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட இருப்பதை அடுத்து பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை பயனாளர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
1.5 கோடி பெண்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva