செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:23 IST)

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா! – நாளை முதல்வர் அவசர ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் ஏற்கனவே தமிழக சுகாதாராத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.