ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (08:00 IST)

3வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து..!

பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்ற நரேந்திர மோடிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் ’பிரதமராக அரசியலமைப்பை நிலை நிறுத்தவும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும் கூட்டாட்சியை மேம்படுத்தவும் மாநில உரிமைகளை மதிக்கவும் நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் ’தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றிருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் விஜய் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva