வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (10:34 IST)

இன்னும் நம்பிக்கை வரலையா.. நானே தடுப்பூசி போட்டுக்கறேன்! – விஜயபாஸ்கர் அதிரடி முடிவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பயப்படும் நிலையில் தானே தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால மருந்தாக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில் முன்கள பணியாளர்களின் பயத்தை போக்க தான் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள இருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.