1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:31 IST)

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 1,500 பேர் பாதிக்கப்படலாம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என  அமைச்சர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
 
உலக விபத்து தினத்தை முன்னிட்டு சென்னை சட்டக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அக்.11 முதல் 31-ம் தேதி வரை மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
 
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5,356 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 531 பேர் உள்ளனர். 5 பேர்உயிரிழந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பரில் 1,000 முதல் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால், விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் சரிபாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
Edited by Siva