திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:42 IST)

இனி விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு..! – அமைச்சர் உறுதி!

Meiyanathan
தமிழகத்திலிருந்து வெளிமாநிலம், வெளி நாடுகளுக்கு விளையாட செல்லும் வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மேகாலயாவில் நடைபெறும் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாட சென்ற இளம்வீரர் தீனதயாளன் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீனதயாளனின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தீனதயாளனின் உடல் சென்னை கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை இனி அரசு மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.