வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (12:29 IST)

ஐ.. பலூனு.. சட்டென குழந்தையாக மாறிய ராஜேந்திர பாலாஜி! – வைரலாகும் வீடியோ!

சிவகாசியில் அம்மா மினி க்ளினிக்கை திறக்க சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலூன்களை உடைத்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி க்ளினிக்குகளை தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் சில நாட்கள் முன்னதாக முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 300க்கும் அதிகமான அம்மா மினி க்ளினிக்குகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அம்மா மினி க்ளினிக்குகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அவற்றை திறந்து வைக்கிறார்கள். இந்நிலையில் இன்று சிவகாசியில் அம்மா மினி க்ளினிக் திறப்பு விழா நடைபெற்றது. அதை திறந்து வைக்க பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்றுள்ளார்.

திறப்பு விழாவையொட்டி ரிப்பன் கட்டப்பட்டிருந்துள்ளது. அதை வெட்டி திறந்து வைக்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கத்தரிக்கோலை கொடுத்தபோது அவர் ரிப்பனை வெட்டாமல். அலங்காரத்திற்கு ஒட்டப்பட்டிருந்த பலூன்களை கத்தரிக் கோலால் உடைத்து விளையாடினார். அனைத்து பலூன்களையும் உடைத்த பிறகே ரிப்பனை வெட்டினார்.

அமைச்சரின் இந்த குழந்தை தனமான குறும்பு செயல் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.