திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (10:56 IST)

கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி: அமைச்சர் பொன்முடி தகவல்!

தமிழக சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்தக் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பி செந்தில்குமார் அவர்கள் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
 
இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூட்டுறவுத் துறை சார்பில் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார் 
 
எனவே அடுத்த சில ஆண்டுகளில் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.