சிகரெட் தூக்கி போட்டால் சி.எம் ஆக முடியாது! – அமைச்சர் பதிலடி!
ரஜினிகாந்த் அரசியல் நுழைவு குறித்து பதிலடி கொடுக்கும்படி பேசி இருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று பேசியது சில நாட்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரசியல் குறித்து பேசியுள்ளார் ரஜினிகாந்த். கமல்-ரஜினி கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ”அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது. சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுக அரசு மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் அரசு” என கூறியுள்ளார்.
தொடர்ந்து ஆளும்கட்சி அமைச்சர்கள் ரஜினி – கமல் அரசியல் பிரவாகம் குறித்து பேசி வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.