திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (09:10 IST)

அம்மா மருத்தகங்களை மூடவில்லை; எடப்பாடியார் தெரியாமல் பேசுகிறார்! – அமைச்சர் விளக்கம்!

அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க செய்யும் வகையில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இங்கு மற்ற மருந்தகங்களை விட சலுகை விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் சரியாக நிர்வகிக்கப்படாமல் மூடப்பட்டு வருவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக உண்மை நிலவரம் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த மருந்தகங்களை விட கடந்த 5 மாதங்களில் கூடுதலாக மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.