திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

நான் பேச தொடங்கினால் தாங்க மாட்டீர்கள்: அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் மைத்துனர் விடுத்த கொலை மிரட்டல் காரணமாக மன்னார்குடி அதிமுக நகர செயலாளர் மாதவன் என்பவர் அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் காமராஜ், திவாகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மாதவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் காமராஜ் கூறியதாவது: இதெல்லாம் தினகரனின் ஏற்பாடு என்றும் திமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவை அழிக்க நினைக்கிறார் தினகரன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் என்னை விமர்சனம் செய்பவர்கள் நான் பேச தொடங்கினால் தாங்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார்.