1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 ஜூன் 2022 (13:05 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

duraimurugan
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டால்ன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
 இதனை அடுத்து முதல்வரது அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யபப்ட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.