எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால்? அமைச்சர் அன்பில் மகேஷ்..!
எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் திராவிடம் தான் அடிமைத்தனத்தை உடைத்தது, பெண் அடிமைத்தனத்தை கிழித்து எரித்தது, மூடநம்பிக்கையை தகர்த்தது என்று சொல்லுங்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் நடந்த சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை மண்டல கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது:
கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் சிலர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்க்க பரிதாபமாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் சேர்த்தே திமுக உழைக்கிறது.
திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைத்தது, பெண் அடிமைத்தனத்தை கிழித்து எரித்தது, மூடநம்பிக்கையை கிளப்பியது. எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால், "உன் முகத்திரை கிழிந்தது" என்ற பதில் கூறுங்கள்.
சிலர் சங்கீகளா? அல்லது சங்கிகள் போர்வையில் அல்லது நேரடியாக சங்கிகளிடம் ஆதரவு பெற்று இருக்கிறார்களா என்று தெரியாமல் சாம்பார், வடை, பாயாசம் என்று பேசுகின்றனர். "சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசி உள்ளார்.
Edited by Siva