வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 மே 2021 (08:01 IST)

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்வது என்ன?

திமுக ஆட்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என்ற உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டபடி செய்முறை தேர்வு மட்டும் நடைபெறும் என்றும் முன்னர் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தெரிவித்தது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு நடத்தி பின்னர் பின்வருமாறு பேசினார், 10 ஆம் வகுப்பு மதிப்பெண், கல்விக்கட்டணம் மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.