1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (10:52 IST)

நிவாரணப் பணிகளுக்கு 5000 கோடி கேட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம்… முதல்வர் மு க ஸ்டாலின்!

நேற்று சென்னையில் தொடர்ந்து 30 மணிநேரத்துக்கும் மேலாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் இப்போது ஆந்திராவின் நெல்லூர் அருகே மையம் கொண்டுள்ளது. இன்று முற்பகல் நேரத்தில் புயல் முழுவதும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முழுவதும் பெய்த பெருமழையால் சென்னையின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இப்பொது சென்னையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்களை நியமித்து தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக 5000 கோடி ரூபாய் கேட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புயல் பற்றி முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.