என்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் எம்ஜிஆர் குறித்து புகழாரம் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
இன்று, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்களது 37 ஆவது நினைவு தினம். இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர்களில் அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர்.
பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள். எப்படி தமது திரைப்படங்களில், விவசாயியாக, மாடு மேய்ப்பவராக, ரிக்ஷாகாரராக, குதிரை வண்டி இழுப்பவராக, மீனவராக என மொத்தத்தில் ஒரு சாமானிய மனிதராக, எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் லட்சியவாதியாக அமரர் எம்.ஜி.ஆர் இருந்தாரோ, பின்னாட்களில் அதிகாரத்திற்கு வந்ததும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.
அமரர் எம்ஜிஆர் அவர்கள். வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்துவத்தை இலக்காகக் கொண்ட நேரடி நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவரது நிர்வாகம், சமூகத்தின் விளிம்புநிலை மக்களை செலுத்தியது. விலையில் வழங்கும் திட்டம், கவனம் முன்னேற்றுவதில் அத்தியாவசியப் பொருட்களை மானிய சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு, விலைவாசி உயர்வால் ஏற்பட்ட சுமையைக் குறைத்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வீடு வழங்கும் திட்டம் மூலம். குறைந்த விலையில் வீட்டு வசதிகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினார்.
உட்கட்டமைப்பை ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் பலவற்றை நிறுவி, சுகாதாரத்தில் கவனம் செலுத்தியது, பொதுச் சுகாதார மேம்படுத்தியது. பல்வேறு தொழில்கள் மற்றும் தொழில் பயிற்சி திட்டங்கள் உட்பட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.
கிராமப்புறங்களில் புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவி, கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தியது. முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் என, ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.
குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்தி, அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது என்றால் மிகையாகாது. அமரர் எம்ஜிஆர் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து, வளர்ச்சிக்கான முயற்சிகளில் அடிமட்ட பங்கேற்பையும் உறுதிப்படுத்தி, விரிவுபடுத்தப்பட்ட நிர்வாகத்தை ஊக்குவித்தார்.
தமது ஆட்சியில், தமிழ்க் கலாச்சாரம். தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்குவித்தார். உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். தமிழக மக்களுக்கு. இது பெருமிதமளித்தது. டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது.
அவரது நலத்திட்டங்களும், தொடர் முயற்சிகளும், தமிழகத்தின் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றியது. தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, மிகுந்த மரியாதை இருக்கிறது. வெளிப்படுத்த அவர் தயங்கியது இல்லை.
அதனை அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவின் போது, அவரது உருவம் பொறித்த ரூ. 100/- நாணயம் வெளியிட்டதோடு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியதும் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான். டாக்டர் எம்.ஜி.ஆர், அவர்களுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள்.
தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள். அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். நமது பிரதமர் மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது. புகழ் பெற்ற சில தலைவர்களின் வாழ்க்கை, எந்த மறைமுக சூத்திரத்தையும் கொண்டிருப்பதில்லை. பொதுமக்களின் மீது கொண்ட அன்பு, சமூகத்தின் மீது கொண்ட அக்கறை என்ற ஒரே கலவைதான். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை. ஒரு சகாப்தம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran