மேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து
மேட்டுப்பாளையம் மற்றும் உதகமண்டலம் இடையே இயங்கி வந்த மலை ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
இந்த நிலையில் நீலகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மேட்டுப்பாளையம் உதகமண்டலம் ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
இந்த நிலையில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன