வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (14:56 IST)

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? ஒருசில பகுதிகளுக்கு மட்டும் தளர்வுகளா?

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் ஒரு சில கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது 
 
தமிழகத்தில் வரும் 7ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்களிடம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்தார்
 
இந்த ஆலோசனையில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் பாதிப்பில்லாத மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது