வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 மே 2020 (14:02 IST)

படிப்படியாக ஊரடங்கு தளர்வு: மருத்துவ குழு முதல்வருக்கு யோசனை!

தமிழகத்தில் பொது முடக்கத்தை படிப்படியாகத் தளர்த்த வேண்டும் என முதல்வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் 509 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் முதல்வருடன் மருத்துவ குழுவினர் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம். அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. மக்கள் பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 
 
கடந்த இரு முறையும் மருத்துவர்களின் பந்துரையை ஏற்று ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாகவே தளர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.