எம்பிபிஎஸ் படிப்பு முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: காலியிடங்கள் எத்தனை
எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற நிலையில் தற்போது காலியிடங்கள் எத்தனை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7254 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலைகளில் 5800 இடங்களும் பல் மருத்துவ கல்லூரிகளில் 1450 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முதல் கட்ட கலந்தாய்வில் 7254 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப் பட்டுள்ள நிலையில் பல் மருத்துவ படிப்பிற்கு மட்டும் 3 இடங்கள் காலியாக உள்ளன என மருத்துவத் துறை அறிவித்துள்ளது