Mask Must-U... கறார் காட்டும் புது செயலாளர்!!
மாஸ்க் அணியாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக் கவசத்தை உயிர்க் கவசம் என எடுத்துக் கொள்ள வேண்டும். மாஸ்க் அணியாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதோடு, சென்னையில் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், ரூ.3 கோடியே 65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.