வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (16:03 IST)

மெரினாவுக்குள் நுழைய மீண்டும் தடை!

வருகிற 16 ஆம் தேதியும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
வருகிற 16 ஆம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள். 
 
இந்த ஆண்டு புத்தாண்டுக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது போன்று காணும் பொங்கல் அன்று வருகிற 16 ஆம் தேதியும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
அதே நேரத்தில் 14 ஆம் தேதி, 15 ஆம் தேதி, 17 ஆம் தேதி ஆகிய 3 நாட்களிலும் இரவு 10 மணி வரை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.