புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:08 IST)

கொரோனான்னு ஒன்னுமில்ல.. எல்லாம் ஏமாத்து வேல! – சர்ச்சை கிளப்பும் மன்சூர் அலிகான்!

கொரோனா என்ற ஒன்றே இல்லை என மீண்டும் மன்சூர் அலிகான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இறந்தபோது அதை கொரோனா தடுப்பூசியுடன் சம்பந்தபடுத்தி பேசியதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று இனி கொரோனா தொற்று குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டேன் என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் பிறந்தநாளில் பேசிய மன்சூர் அலிகான் “நானும், லியாகத் அலி கானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார். கொரோனா என்று ஒன்றும் இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர்” என கூறியுள்ளார்.